2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் நிறைவேற்ற அனுமதி மறுப்பு

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா

யாழ்.கீரிமலை புனித தீர்த்தக்கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றச் சென்றவர்களை உட்செல்லவிடாமல் இராணுவத்தினர் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீரிமலையில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், பாலச்சந்திரன் கஜதீபன் மற்றும் ரி.துவாரகேஸ்வரன் (வடமாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்) ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை கீரிமலைக்குச் சென்றனர்.

இதன் போது அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கீரிமலையில் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதியளிக்க முடியாது என்று கூறியதுடன் அவர்கள் உட்செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகள் துவாரகேஸ்வரனால் கீரிமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக 50 சிவாச்சாரியர்களும் அவர்களுக்கான தானங்களும் துவாரகேஸ்வரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இன்று(18) பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்காக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மற்றும் இறந்த திதி இன்று உள்ளவர்களின் உறவினர்களும் பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்குச் சென்றிருந்தனர்.

இவர்கள் உட்செல்ல இராணுவம் அனுமதியளிக்க மறுத்த நிலையில் அவர்கள் திரும்பி வந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .