2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர்

Kogilavani   / 2014 மே 22 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    குணசேகரன் சுரேன் -

இந்தியப் பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திரமோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பவிருக்கும் கடிதத்தினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (22) வடமாகாண சபையில் வாசித்துக் காட்டினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை (22) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போதே முதலமைச்சர் மோடிக்கான வாழ்த்துக்கள் தெரிவித்து அனுப்பவிருக்கும் கடிதத்தினை வாசித்துக்காட்டினார்.
முதலமைச்சர் கழுத்தில் கறுத்துப்பட்டி அணிந்தபடி சபை அமர்வுகளில் கலந்துகொண்டார். எனினும் அவர் தீபமேற்ற அஞ்சலி செலுத்திய நேரம் சபையில் சமூகமளித்திருக்கவில்லை.

சபையில் இன்று முதலமைச்சர் உரையாற்றுகையில்,

எங்களுடைய உணர்வுகளை அரசாங்கம் தவறாகப் புரிந்துகொண்டுள்ளது. இறந்தவர்களுக்கான நாங்கள் அஞ்சலி செலுத்தினால் எங்கே இறந்தவர்கள் மீண்டும் வந்துவிடப் போகின்றார்களோ என்ற பயம் அரசாங்கத்திடம் இருக்கின்றது.

வெற்றிக் கொண்டாட்டங்களைச் செய்யும் போது, எமது மண்ணில் இறந்தவர்களை நினைவு கூருவதில் எவ்வித தவறும் இல்லை. அது எங்களுக்கான உரிமை அதனை அரசாங்கம் தடுக்கக்கூடாது' என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .