2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உள்ளுராட்சி மன்றங்களின் கலந்துரையாடல்

Kanagaraj   / 2014 மே 25 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


- றஜீவன்


யாழ். வடமராட்சிப் பகுதியினைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள், பிரதேச சபையின் செயற்பாடுகளை சீராக மேற்கொள்ளுதல், தற்போது பதிவு செய்யப்படும் தேர்தல் வாக்காளர் இடாப்புக்களில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலுக்காக கரவெட்டிப் பிரதேச சபை, பருத்தித்துறை பிரதேச சபை, நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை ஆகியவற்றின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்களாக எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .