2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பெண்ணை தொந்தரவு செய்தவர் கைது

Kanagaraj   / 2014 மே 27 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியில்  தன்னை திருமணம் செய்யும்படி பெண்ணொருவரை தொந்தரவு செய்த நபரை திங்கட்கிழமை இரவு (26) கைது செய்ததாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று (27) தெரிவித்தனர்.

ஊர்காவற்றுறை கரம்பன் மேற்கினைச் சேர்ந்த கந்தையா லிங்கேஸ்வரன் (34) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அதே பகுதியினைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவரை, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி  அடிக்கடி தொந்தரவு செய்ததுடன், குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று பொருட்களையும் உடைத்துள்ளார்.

இது தொடர்பாக தொந்தரவுக்குள்ளாகிய பெண் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் ஒரு மாத காலத்திற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்தமையால் குறித்த நபர் தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்நிலையில் திங்கட்கிழமை (27) குறித்த நபரின் நடமாட்டத்தை பிரதேசத்தில் அவதானித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் பொலிஸாரிற்குக் தகவல் தெரிவித்ததனையடுத்தே பொலிஸார் இந்நபரைக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .