2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை

Super User   / 2014 மே 28 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.நெடியகாடு பிரதேசத்தில் வீடொன்றில் தனிமையில் வசித்த வந்த மூதாட்டியொருவரைத் தாக்கிவிட்டு, அவரின் கழுத்திலிருந்த 5 பவுண் சங்கிலியை புதன்கிழமை (28) இனம்தெரியாத நபர்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சோமசுந்தரம் ராஜேஸ்வரி (87) என்பவரே சம்பவத்தின் போது தாக்கப்பட்டவர்.

காயமடைந்த நிலையில் குறித்த மூதாட்டி தற்போது ஊறணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருவதன் காரணத்தினால் வெகுகாலமாக இவர் தனிமையிலேயே வசித்து வந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .