2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சி

Menaka Mookandi   / 2014 மே 29 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணத்தில் வாழைப்பழத்தின் விலை வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளதென யாழ். மாவட்ட விவசாய திணைக்கள பிரதி மாகாண பணிப்பாளர் கிருஷ்ணன் சிறிபாலசுந்தரம் தெரிவித்தார்.

யாழ்ப்பாண சந்தைகளில் இதரை வாழைப்பழம் 1 கிலோ 35 ரூபா தொடக்கம் 40 ரூபா வரையும், கதலி வாழைப்பழம் 1 கிலோ 15 ரூபா தொடக்கம் 20 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றதாகத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் 900 தொடக்கம் 1000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வாழைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொடர்ந்து தற்போது யுத்தம்  முடிவடைந்த பின் வாழைப் பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்திலும் வாழைச் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டு இப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பாண்டியன்குளம், முத்தையன்கட்டு, உடையார்கட்டு, விசுவமடு போன்ற பகுதிகளில் அதிகளவில் வாழைப் பயிர்ச்செய்கை செய்யப்படுதினால் யாழில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளது.

அதேபோல் தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை, வீரவில, சூரியவௌ பகுதியில் விவசாயிகள் நெல் வயல் நிலங்களில் ஆற்று நீரை நம்பி வாழைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு வாழைப்பழம் கொண்டு செல்வது குறைவடைந்துள்ளமையினால் யாழில் வாழைப்பழத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

இனிவருங் காலங்களில் யாழ்ப்பாணத்து விவசாயிகளுக்கு குறைந்த செலவில் நிறைந்த பயனைப் பெற்றுக்கொள்ளும் முகமாக இளையவளர்ப்பு வாழைப்பயிர்ச் செய்கை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தி இத்திட்டத்தணை ஊக்குவிக்க விவசாயத் திணைக்களம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X