2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழ்.மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை

Menaka Mookandi   / 2014 மே 29 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுஷ;டிக்க முற்பட்டவேளை அதனை மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தடை விதித்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாது வெளிநடப்புச் செய்தனர்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று வியாழக்கிழமை (29) மாநகர சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

கூட்டம் ஆரம்பித்த வேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாங்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போவதாகக்கூறி எழுந்த போது, அதனை முதல்வர் மறுத்ததுடன், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நினைவேந்தல் நடத்த முடியாது என சபையில் கூச்சல் குழப்பம் விளைவித்தனர்.

இதனால் அதிருப்பதியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். இந்நிலையில் தற்போது முதல்வர் தலைமையில் மாதாந்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .