2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்தவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஜூன் 03 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ்., சாவகச்சேரி, கச்சாய்ப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை நேற்று திங்கட்கிழமை (02) இரவு கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் இன்று (03) தெரிவித்தனர்.

அத்துடன், மணல் அகழ்வதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மூவரும் மணல் அகழ்வில் ஈடுபடுவதாகப் பொதுமகன் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார், கச்சாய்ப் கேணியடிப் பகுதியினைச் சேர்ந்த மேற்படி மூன்று நபர்களையும் கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .