2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சீட்டு பிடிப்பவர்கள், மீற்றர் வட்டிக்காரர்களுக்கு தடை

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலி. தெற்கு (உடுவில்) பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப்பிடிப்பவர்கள் நடமாடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் புதன்கிழமை (11) தெரிவித்தார்.

இது தொடர்பில் வலி. தெற்குக்கு உட்பட்ட சந்தைகளில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பிரதேச சபையினால் ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப் பிடிப்பவர்களின் நடவடிக்கைகள் காரணமாக சந்தை வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக சந்தையில் அதிகளவிலான பொதுமக்கள் கூடியிருக்கும் வேளையில், மீற்றர் வட்டிக்காரர்களும், சீட்டுப் பிடிப்பவர்களும் வியாபாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசுவதும் அதனால் வியாபாரிகள் தற்கொலை செய்தல் மற்றும் தொழிலில் இருந்து நீங்குதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அண்மையில் இத்தகைய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்மையினால் அதனைக் கருத்திற்கொண்டு இந்தக் கட்டுப்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும் இந்தக் கட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வியாபாரிகளும் பாதிப்படையப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .