2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நெடுங்குளம் வீடமைப்பு வசதிகள் குறித்து ஆராய்வு

Menaka Mookandi   / 2014 ஜூன் 12 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணம், நெடுங்குளம் பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அப்பகுதி மக்களின் வீடமைப்பு வசதிகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இப்பகுதி மக்களுக்கு காணிகளும் வீடமைப்பு ஏற்பாடுகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஒப்புதலுக்கு ஏற்ப அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை நிவர்த்திக்கும் வகையிலேயே அவர் அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது நிகழ்த்தப்பட்ட கலந்துரையாடலில் உரிய விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிப்புரைகளை, யாழ். பிரதேச செயலாளருக்கும் மாநகர முதல்வருக்கும் ஜே 61 கிராம சேவையாளருக்கும் நில அளவையாளருக்கும் அமைச்சர் வழங்கினார்.

அத்துடன் அப்பகுதியிலுள்ள நெடுங்குளத்தை ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அக்குளத்தை புனரமைப்பது தொடர்பிலும் அதனருகேயுள்ள மைதானத்தை புனரமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .