2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் கைது

Kogilavani   / 2014 ஜூன் 12 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன் 

யாழிலுள்ள நீதிமன்றங்களினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை  புதன்கிழமை (11) இரவு புத்தூர் மேற்கு பகுதியில் வைத்து கைதுசெய்ததாக அச்சுவேலிப் பொலிஸார் வியாழக்கிழமை (12) தெரிவித்தனர்.

அதேயிடத்தினைச் சேர்ந்த ரஞ்சன் முரளி (30) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

மேற்படி நபரை யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் விவகாரத்து வழக்கிற்கு ஆஜராகும்படியும், மல்லாகம் நீதிமன்றத்தினால் கைகலப்பு வழக்கொன்றில் ஆஜராகும்படியும் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தும், அவர் கடந்த ஒரு வருடமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இதனால் குறித்த நபரைப் கைதுசெய்யுமாறு நீதிமன்றங்களினால், பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை புதன்கிழமை (11) இரவு கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .