2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்து: மூவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்.பரமேஸ்வரா சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் வெள்ளிக்கிழமை (13) மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று சனிக்கிழமை (14) தெரிவித்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு வீதிக்கு மோட்டார் சைக்கிளை செலுத்த முனைந்த வயோபதிரை, திருநெல்வேலி பகுதியில் இருந்து யாழ்.நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .