2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டில் இருவர் படுகாயம்

A.P.Mathan   / 2014 ஜூன் 15 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்
 
யாழ். கைதடிப் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டிற்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
 
நேற்று (15) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கைதடியினைச் சேர்ந்த கோகுலநாதன் கோமலன் (34), சுந்தரலிங்கம் சுகிர்தராஜ் (34) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.
 
வீதியோரத்தின் நின்று கதைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது 3 மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணிந்த நிலையில் வந்த கும்பலே தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .