2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஆலயத்தினுள் பூசகர் சல்லாபம்: பொதுமக்களால் நையப்புடைப்பு

Kogilavani   / 2014 ஜூன் 16 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

அராலி வடக்குப் பகுதியிலுள்ள ஆலயமொன்றினுள் பெண்ணொருவருடன் சல்லாபத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பூசகர் ஒருவரை  ஊர்  மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல்; இடம்பெற்றுள்ளது.

குறித்த பூசகர் காலையில் ஒரு பெண்ணுடன் ஆலயத்திற்குச் சென்றபோது, பொதுமக்கள் இருவரையும் அவதானித்துள்ளனர். இருந்தும், வழிபாட்டிற்காக வந்த பெண் என்று நினைத்து பொதுமக்கள் அது தொடர்பில் கவனத்தில் கொள்ளவில்லை.

இந்நிலையில், பிற்பகல் வேளையிலும் பூசகர் ஆலயத்திற்குள் செல்வதும் வெளியில் வருவதுமாக இருந்துள்ளார். இதனால் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் ஆலயத்திற்குள் சென்று பார்த்த போது, குறித்த பெண்ணும் பூசகரும் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததினை அவதானித்தனர்.

இதனால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் பூசகரினைப் பிடித்து நையப்புடைத்துள்ளனர். அத்துடன் குறித்த பெண்ணிடம் விசாரணைகள் மேற்கொண்டபோது, அவர் கிளிநொச்சியினைச் சேர்ந்தவர் என்றும் சிவில் பாதுகாப்பு படையில் கடமையாற்றுபவர் எனவும் தெரியவந்தது.

தொடர்ந்து அவ்விடத்திற்கு இராணுவத்தினர் வருகை தந்ததுடன், பெண்ணினை இராணுவத்தினரின் கட்டளைக்கமைய பொதுமக்கள் விடுவித்ததுடன், பூசகரினையும் எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X