2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 19 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன், நா.நவரத்தினராசா, ஏ.எச்.ஏ.ஹுஸைன்


யாழ். மாதகல் துறைமுகத்தில் 132 கிலோகிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும்  மாதகல், புன்னகைப்புலம் பகுதியைச்  சேர்ந்த 19 வயதான ஒருவரை   வியாழக்கிழமை (19) காலை கைதுசெய்ததாக இளவாலை பொலிஸ் நிலையப் பொலிஸ் பரிசோதகர் டி.எம்.ஷிந்தக பண்டார தெரிவித்தார்.

அத்துடன், இச்சந்தேக நபரிடமிருந்து  ஒரு கோடியே 32 இலட்சம் ரூபா பெறுமதியான  132 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார். 

மாதகல் துறைமுகத்தில் கஞ்சாவுடன் இருவர் நிற்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார், இருவரையும்  கைதுசெய்ய முயன்றபோது ஒருவர் தப்பியோடியுள்ளார்.  இந்நிலையில், மேற்படி சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.

குறித்த கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன், தப்பியோடியவரை  கைதுசெய்வதற்கான  நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட  கஞ்சாவில் இதுவே அதிகூடிய பெறுமதியான கஞ்சா எனவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .