2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புகைப்படக் கண்காட்சி

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா

யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் ஊடக வளங்கள் பயிற்சி மையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள, வரலாற்றுச் சுவடுகள் என்னும் புகைப்படக் கண்காட்சி,  புதன்கிழமை(25)  முதல்  வெள்ளிக்கிழமை (27) வரை, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் கலைப்பீட வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியில் 60 வரலாற்று தொல்லியல் இடங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதோடு பேராசிரியர் இந்திரபாலாவின் தொல்லியல் நிலையமும் திறந்து வைக்கப்படவுள்ளது.

இக்கண்காட்சியின் போது, தொல்லியல் இடங்களின் அழிவையும் அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .