2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஊடகச் செயற்பாடுகள் தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்

ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸாரிற்கும் இடையிலான முரண்பாடுகளை நீக்குதல் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் விளக்கமளிக்கும் செயலமர்வு யாழ்.பொது நூலகக் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்றது.

இந்தச் செயலமர்வினை இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவும் மற்றும் யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸும் இணைந்து  ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில், பொலிஸ் நிலையங்களில் செய்தி சேகரிக்கும்போது ஏற்படும் சவால்கள், அவற்றினை எவ்வாறு சமாளித்தல், செய்திகள் வெளியிட்ட பின்னர் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.

இதில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுகுமார் றொஹ்வூட், சிங்கள மொழி ஊடகப் பொறுப்பாளர் கமல் லியனகே, தமிழ் மொழி ஊடகப் பொறுப்பாளர் எம்.எஸ்.அமீர் உசைன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .