2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மலசலகூடம் அமைப்பதற்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2014 ஜூன் 27 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -நா.நவரத்தினராசா


மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியில் உடுவில் பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேறிய 15 குடும்பங்களுக்கு மலசலகூடங்கள்  அமைப்பதற்கான நிதியுதவி இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இதன்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் முதற்கட்டமாக 12,00) ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன. 

மலசலகூடமொன்று அமைப்பதற்காக  60,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும்,  மேற்கொள்ளப்படும் வேலைகளுக்;கேற்ப கட்டம் கட்டமாக நிதி வழங்கப்படுமென் பிரதேச செயலகம் தெரிவித்தது.

உடுவில் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலர் யசோதா உதயகுமார் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான முருகேசு சந்திரகுமார், உடுவில் பிரதேச செயலக பிரதி திட்டப் பணிப்பாளர் திருமதி ரதி நகுலேஸ்வரன் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .