2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கைகலப்பில் மாணவன் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 27 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, எஸ்.வித்தியா

பாடசாலையொன்றின் முன்றலில் சக மாணவர் ஒருவரின் தாக்குதலில் படுகாயமடைந்த யாழ். அரியாலை மாம்பழம் சந்தியைச் சேர்ந்த பி.ஹரிதாஸ் (வயது 16)   இன்று வெள்ளிக்கிழமை (27) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த மாணவனுக்கும்  மற்றைய மாணவனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இந்த  நிலையில்,  பாடசாலை முடிவடைந்த பின்னர்   மற்றைய மாணவன் இரும்புக்கம்பியால் மேற்படி மாணவனை தாக்கியுள்ளான்.

இது தொடர்பில் விரிவான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .