2025 ஜூலை 02, புதன்கிழமை

ஊழியர் மீது ஒழுக்காற்று விசாரணை

Kogilavani   / 2014 ஜூன் 29 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நா.நவரத்தினராசா

வலி.தெற்கு (உடுவில்) பிரதேச சபைக்குச் சொந்தமான பொருட்கள் சிலவற்றினை முறையற்ற விதத்தில் வீட்டுக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் ஊழியர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் ஞாயிற்றுக்கிழமை (29) தெரிவித்தார்.

பிரதேச சபைக்குச் சொந்தமான தகரங்கள், இரும்பு குழாய்கள் மற்றும் இரும்புக் கேடர்கள் போன்றவற்றினை பிரதேசசபை ஊழியர் ஒருவர் வீட்டுக்கு எடுத்துச் சென்றார் என பிரதேச சபையின் நிதிக்குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனடிப்படையில் குறித்த ஊழியர் அவ்வாறான செயலில் ஈடுபட்டாரா, என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த ஊழியர் குற்றமிழைத்தவர் என அடையாளங் காணப்பட்டால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .