2025 ஜூலை 02, புதன்கிழமை

மாடு வெட்டியவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி வடக்கு பகுதியில் சட்டவிரோதமாக  இறைச்சிக்கு மாடொன்றை வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 33 வயதான ஒருவருக்கு  7,500 ரூபாவை  தண்டமாக  மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா செவ்வாய்க்கிழமை (01)  விதித்தார்.

மேலும், கைப்பற்றப்பட்ட  இறைச்சியை மேலதிக நீதவானின் உத்தரவுக்கு அமைய,  நீதிமன்றத்துக்கு பின்னாலுள்ள வளவில்  எரியூட்டியதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய குற்ற ஒழிப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.என்.சி.பிரதீப் செனவரத்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு சென்று திங்கட்கிழமை (30) பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .