2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மனைவியின் ஆடைகளையும் வீட்டையும் எரித்த கணவன் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 09 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., சுன்னாகம், பருத்திக்கலட்டிப் பகுதியில் மனைவியுடன் சண்டைபிடித்துக் கொண்டு வீட்டை எரித்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மதுபோதையில் தனது மனைவியுடன் சண்டை பிடித்துக்கொண்டு மனைவியின் ஆடைகளை தீயிட்டுக் கொழுத்தியுள்ளார். இந்தத் தீ வீட்டின் கூரைச் சிலாகைகளில் பற்றிக்கொண்டதினால் வீடும் தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து, அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

இந்நிலையில், தனது கணவன் வீட்டினை எரித்துள்ளார் என மனைவி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்த முறைப்பாட்டின் பிரகாரமே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .