2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

காணிகளை அபகரிக்க இடமளியோம்: கஜேந்திரன்

Menaka Mookandi   / 2014 ஜூலை 21 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். இராணுவத்தினர் மக்களது காணிகளை ஆக்கிரமிக்க நாங்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று திங்கட்கிழமை (21) தெரிவித்தார்.

அச்சுவேலி இராச வீதியில் பொதுமக்களுடைய 53 பரப்புக் காணிகளை இராணுவ முகாமிற்கு சுவீகரிக்கும் நோக்கில் அளவீடுகள் செய்ய நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியினைத் தடுத்து நிறுத்திய பின்னர் கருத்துக் கூறுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

'அச்சுவேலியில் பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்யும் பணி இன்றைய தினம் கைவிடப்பட்டுள்ளது. அது நிரந்தரமாக கைவிடப்பட்டதா? என்று தெரியவில்லை.

பொதுமக்களிடம் இந்தக் காணிகள் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் அங்கே மீள்குடியேறும் வரையில் இந்தக் காணிகளுக்கு என்ன நடைபெறப் போகின்றது என்பதை நாங்கள் உன்னிப்பாக பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நாங்கள் எங்கள் மக்களை முன்னேற்றுகின்ற காரியங்களை விட்டுவிட்டு எப்போது அரசு மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. அதற்கு எதிராக நாங்கள் எப்படி போராட்டம் நடாத்த வேண்டும் என்பது தொடர்பாகவே, நாங்கள் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இங்குள்ள இராணுவ முகாம் மட்டுமல்ல, தாயகத்திலுள்ள இராணுவ முகாங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு படையினர் முழுமையாக வெளியேற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. ஆனால் இன்று வரை அதனை அரசு செவிமடுக்காமல் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

அதனை நங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மக்களது காணிகளை ஆக்கிரமிக்க நாங்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். மக்களுடன் சேர்ந்து அவர்களது உரிமைக்காகத் தொடர்ச்சியாக போராடுவோம்' என மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .