2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கஞ்சா சுருட்டுடன் கைதான இருவருக்கு விளக்கமறியல்

George   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். ஆவரங்கால் மேற்குப் பகுதியில் வைத்து கஞ்சா சுருட்டுக்களுடன் வெள்ளிக்கிழமை (01) இரவு கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா சனிக்கிழமை (02) உத்தரவிட்டார்.

அதேயிடத்தினைச் சோந்;த 19 மற்றும் 21 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி இரு சந்தேகநபர்களும் கஞ்சா சுருட்டு வைத்து நுகரும் போது, ரோந்தில் ஈடுபட்ட அச்சுவேலிப் பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து, மேற்படி இரு சந்தேகநபர்களையும் மேலதிக நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையிலேயே நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .