2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தனியாகம் அடிகளாருக்கு யாழில் நினைவுத்தூபி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன், எம்.றொசாந்த்

யாழ். மறைமாவட்டமும், யாழ்.மாவட்ட தமிழ்ச்சங்கமும் இணைந்து யாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடி சந்தியில் அமைத்த தனிநாயகம் அடிகளாரின் நினைவுத்தூபி சனிக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை இந்த நினைவுத் தூபியினைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் பிறந்த தனிநாயகம் அடிகளார், ஈழத்துத் தமிழறிஞர் கல்வியாளர் ஆவார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .