2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விளம்பரப் பதாகைகளுக்குத் தடை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா, பொ.சோபிகா


நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதியில், சுவாமி வீதியுலா வரும் வழிகளில் விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 01ஆம் திகதி முதல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே ஆலயச் சூழலில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை, மாநகர சபை ஊழியர்கள் அகற்றியுள்ளது.

இதனடிப்படையில் சுவாமி வீதியுலா வரும் வழிகளில் நிறுவனங்கள், அமைப்புக்கள் ஆகியவற்றின் விளம்பரப் பதாகைகள் வைக்கவோ விளம்பரங்களை ஒட்டவோ முடியாது எனத் தெரிவித்தார்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் புனிதமாக வழிபாடுகளில் ஈடுபடவும், ஆலயச் சூழலினை பக்திமயமாக வைத்திருக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .