2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அனுமதியின்றி மண் கொண்டு சென்றவர்களுக்குத் தண்டம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். வல்லை வீதி வழியாக அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரம் மற்றும் கன்ரர் ரக வாகனம் ஆகியவற்றில் மண்  கொண்டு சென்ற இருவருக்கும், மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா, திங்கட்கிழமை (04) தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார்.

ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபரும், அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபரும், அச்சுவேலிப் பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு கைது செய்யப்பட்டனர்.

ஆலயம் ஒன்றின் வெளி வீதிக்கு மண் போடுவதற்காக, வல்வைப் பகுதியிலுள்ள தரிசு நிலத்திலிருந்து அனுமதியின்றி மண்வெட்டிச் சென்றுகொண்டிருந்த போதே மேற்படி சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படனர்.

தொடர்ந்து, மேற்படி நபர்களை மேலதிக நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (04) மாலை ஆஜர்படுத்திய போதே நீதவான் தண்டம் விதித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .