2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்துக்குப் பிணைமுறி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கல்லாறுப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை 12 இலட்சம் ரூபாய் பிணைமுறியில் கொண்டுசெல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், புதன்கிழமை (06) உத்தரவிட்டார்.

அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்ற சந்தேகத்தில் அதன் சாரதி நேற்று செவ்வாய்க்கிழமை (05) கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கூடவே உழவு இயந்திரமும் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், மேற்படி சாரதியை இன்று புதன்கிழமை (06) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளை, கண்டாவளைப் பிரதேச செயலாளரின் அனுமதி பெற்றே மணல் கொண்டு சென்றதாகசாரதி, தனது சட்டத்தரணியூடாக மன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து, உழவு இயந்திரத்தை 12 இலட்சம் ரூபாய் பிணைமுறியில் விடுவித்த நீதவான், மேற்படி வழக்கு விசாரணையை செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .