2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

குழந்தையைத் தாக்கிய தந்தைக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன், ற.றஜீவன்

யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிராமம் பகுதியில் சனிக்கிழமை (09) இரவு தனது 9 மாதக் குழந்தையைத் தலைகீழாகப் பிடித்து தாக்கியதுடன், மனைவியையும் கடுமையாகத் தாக்கிய சந்தேகநபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார்.

தலைமறைவாகியிருந்த சந்தேக நபர், இராஜகிராமம் பகுதிக்கு திங்கட்கிழமை (11) காலை வந்திருந்த சமயம் நெல்லியடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து, மேற்படி நபரை சிறுவர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (11) மாலை ஆஜர்ப்படுத்தப்படுத்திய போதே, நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இச்சம்பவத்தில் இராஜேஸ்வரன் தமிழ்ச்செல்வி (வயது 27) மற்றும் அவரது குழந்தை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .