2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கோஷ்டி மோதலுடன் தொடர்புடைய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். ஊரிக்காடு, நெற்குழு பகுதியில் உள்ள வைரவர் கோவில் ஒன்றில் இடம்பெற்ற கோஷ்டி மோதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 19 மற்றும் 21 வயதுடைய   சந்தேக நபர்கள் இருவரை நேற்று திங்கட்கிழமை (11) இரவு கைதுசெய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தனர்.

இந்தக் கோவிலில் நேற்றையதினம் (11) இரவு பூங்காவனத் திருவிழா நடைபெற்றது. இதன்போது, இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், அங்கு சென்ற தாம் மோதலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு ஊரிக்காடு பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .