2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கரை சேர்ந்த ஐவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஜூலை மாதம் 17ஆம் திகதி யாழ். நயினாதீவுக் கடற்கரையை  வந்தடைந்த  ஐந்து பேரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டார்.

மேற்படி ஐந்து பேரும் படகுகள் எதுவுமின்றி நீந்திக் கரை சேர்ந்தபோது, கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், தாங்கள் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க வந்ததாகவும் தங்களது படகு கடலில் மூழ்கியதாகவும் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேற்படி நபர்களின் வழக்கு மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .