2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பஸ் மீது கல்வீச்சு: நால்வர் காயம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பஸ் மீது முகாமாலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளாதாக பளைப் பொலிஸார் புதன்கிழமை (13) தெரிவித்தனர்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(12) இரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த, அருட்சகோதரி ஜெலான்டினா (வயது 50) என்பவர் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இனந்தெரியாத நபர் ஒருவரே பஸ்ஸுக்கு கல் எறிந்ததாகவும் அந்நபரை  துரத்திச் சென்றபோது அவர், பற்றைக்காட்டிற்கு ஓடிவிட்டதாகவும் பஸ்ஸில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மிதிவெடி அபாயம் காணப்பட்டமையால் மேற்கொண்டு குறித்த நபரைத் துரத்தவில்லையென பயணிகள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .