2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தேங்காய் வியாபாரி சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

தேங்காய் கொள்வனவுக்காக யாழ்ப்பாணத்துக்குச் சென்ற திருகோணமலை வியாபாரி ஒருவர், திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று இன்று புதன்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்த மீராசாஹிப் அப்துல் ஜாபர் (வயது 72) என்ற தேங்காய் வியாபாரியே இவ்வாறு திடீரென உயிரிழந்தவராவார்.

யாழ்., கொடிகாமம் பகுதியில் வைத்தே இவர் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X