2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கர்பிணியைத் தாக்கியவர் கைது

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.வல்வெட்டித்துறை, ஊறணிக் குடியேற்றத்திட்டப் பகுதியைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பிணியைத் தாக்கிய கணவரை புதன்கிழமை (13) இரவு கைதுசெய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் வியாழக்கிழமை (14) தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த தம்பிராசா ஜெயசீலன் (வயது 35) என்ற நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த இவரது மனைவி,  ஜெயசீலன் சுகந்தினி (வயது 33) தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், புதன்கிழமை (13) இரவு மதுபோதையில் வீட்டிற்கு சென்று மனைவியுடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளதுடன் மனைவியை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதில் பாதிப்படைந்த அப்பெண், ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்கைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மேற்படி நபரை கைதுசெய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X