2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழிலிருந்து கொழும்புக்கு சைக்கிள் பேரணி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஓக்ஸ்சோமிலன் இருந்த நிதியத்தின் இருதய சிகிச்சைத் துறை விழிப்புணர்வுக்கான மாபெரும் சைக்கிள் பவனி, இன்று வெள்ளிக்கிழமை (15) காலை, கைலாச பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.

இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்களுக்காக வடமாகாணத்தில் இருதய சத்திர சிகிச்சைக்கான துறையொன்றை ஸ்தாபிப்பதற்கு நிதி திரட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சைக்கிள் பவனியானது, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கிறது. 

இந்தப் பவனியை, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைந்து ஆரம்பித்து வைத்தார்கள்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து, இந்த சைக்கிளோட்ட பவனி கைலாசப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம், யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X