2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உள்ளாடையுடன் சென்று பெண்ணை கட்டிப்பிடித்தவர் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கரவெட்டி, வதிரி ஆண்டாள் வளவுப் பகுதி வீடொன்றில்  தனித்திருந்த பெண்ணை, உள்ளாடையுடன் சென்று கட்டிப்பிடித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (14) மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பகுதியில், திருமணமான பெண்ணொருவர், அவரது கணவர் வெளிநாட்டு வசித்து வருகின்ற நிலையில் தனிமையில் வசித்து வருகின்றார். மேற்படி பெண்ணின் வீட்டிற்கு ஓரிரு வீடுகள் தள்ளி வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயது குடும்பஸ்தர், வியாழக்கிழமை (14) மதியம் பெண்ணின் வீட்டிற்கு உள்ளாடையுடன் சென்று மேற்படி பெண்ணைக் கட்டிப்பிடித்துள்ளார்.

இதனால், குறித்த பெண் கூக்குரலிடவே, சந்தேகநபர் தப்பித்து ஓடியுள்ளார். இதனையடுத்து, அப்பெண் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (14) மாலை முறைப்பாடு பதிவு செய்தார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

  Comments - 0

  • c.meenakshi sundaram Sunday, 24 August 2014 04:43 AM

    மனித மிருகங்களை கொலை செய்ய வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X