2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு லேகியம் விற்றவர் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், மீசாலை உசன் பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு லேகியம் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 27 வயதுடைய சந்தேகநபரை வியாழக்கிழமை (14) கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தனர்.

உசன் பகுதியில் பாடசாலை மாணவர்கள் லேகியம் (குழி) எனப்படும் போதைப் பொருளைப் பயன்படுத்துவதாக பொலிஸாரிற்குத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், மேற்படி போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், இதனை விற்பனை செய்தவர் அதேயிடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மேற்படி சந்தேகநபர் வியாழக்கிழமை (14) மாலை கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X