2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பளையில் ஆயுதங்கள் மீட்பு

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்
 
பளை, வேப்பங்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலுள்ள கிணற்றுக்குள் இருந்து ஆயுதங்கள் சனிக்கிழமை (16) மாலை மீட்கப்பட்டதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
எம் 75 கைக்குண்டு ஒன்றும், ஆர்.பி.ஜி குண்டொன்றுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
தற்போது, நிலவும் வரட்சி காரணமாக கிணற்று நீர் வற்றியவேளையிலேயே மேற்படி ஆயுதங்கள் வெளிப்பட்டதாகவும், இது தொடர்பில் காணி உரிமையாளர் பளைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்த பொலிஸார், இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று ஆயுதங்களை மீட்டதாகப் மேலும் தெரிவித்தனர்.
 
அதேவேளை, பளை வன்னியங்கேணிப் பகுதியில் நிலத்தில் புதையுண்டு இருந்த 81 மில்லிமீற்றர் ஷெல் ஒன்றும் சனிக்கிழமை (16) காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .