2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

யாழ். வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவுக்கான நியமனக் கடிதங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் சனிக்கிழமையன்று (16) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டன. யாழ். போதனா வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போதுஈ வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மௌலவி சுபியான், சட்டத்தரணி ரெங்கன், அகஸ்ரின் மாஸ்டர், சொல்லின் செல்வர்; செல்வவடிவேல், பொறியியலாளர் சூரி, தங்கராசா, பாலகிருஸ்ணன், செல்வரத்தினம், வர்த்தகர் ஜனக்குமார், ஜோர்ஜ், ரஞ்சன் ஆகியோருக்கே அமைச்சர் இந்த நியமனக் கடிதங்களை கையளித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த முறை நியமிக்கப்பட்டிருந்த அபிவிருத்திக் குழு, பல முன்னேற்றமான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிலைமைகளில் மாற்றங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்ததுடன் வைத்தியசாலை பணிப்பாளரின் பணிகளும் பாராட்டத்தக்கதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதிய அபிவிருத்திக்குழுவின் தலைவராக மீண்டும் வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளையும் செயலாளராக மீண்டும் சொல்லின் செல்வர் செல்வவடிவேல் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .