2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் ஜீப் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் பொலிஸ் ஜீப் வண்டி மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார்  திங்கட்கிழமை (18) தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தருணாரட்ணம் கிரிதரன் (வயது 26) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்தார்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில், வீதித் தடைக் கடமையில் ஈடுபட்டிருந்த மேற்படி உத்தியோகத்தர் மீதே பொலிஸ் வாகனம் மோதியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .