2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உண்டியல் உடைப்பு முயற்சி தோல்வி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.மீசாலை காளிகோவில் இருந்த  உண்டியலை திருடர்கள்; திருட முற்பட்டபோது பொதுமக்கள் விழித்துக் கொண்டமையால் அம்முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் வியாழக்கிழமை (21) தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸ் கூறுகையில்,

ஆலயத்திற்குள் அதிகாலை நுழைந்த திருடர்கள் ஆலயத்திலிருந்த உண்டியலை உடைக்க முற்பட்டுள்ளனர்.

சத்தம் கேட்ட அயலவர்கள், ஆலயத்துக்கு வந்த வேளையில் உண்டியலை உடைக்க முற்பட்டவர்கள் தப்பியோடியுள்ளனர்.

இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் புதன்கிழமை (20) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .