2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கசிப்பு விற்ற பெண்ணுக்குத் தண்டம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான், செல்வநாயகம் கபிலன்

யாழ்.கொடிகாமம் எருவன் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு 1 இலட்சம் ரூபா தண்டம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் புதன்கிழமை (20) உத்தரவிட்டார்.

கொடிகாமம் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையன்போது மேற்படி பெண் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபர் சாவகச்சேரி நீதிமன்றத்தில் புதன்கிழமை (20) ஆஜர்படுத்தப்பட்டபோது  நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.

இதேவேளை,   இலங்கை வங்கி கைதடிக் கிளையில் போலி நகையை அடகு வைத்த கைதடி மத்தியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் புதன்கிழமை (20) உத்தரவிட்டார்.

மேற்படி பெண், 1½ பவுண் நகைகளை செவ்வாய்க்கிழமை (19) வங்கியில் அடகு வைத்துவிட்டு, வெளியேறும் வேளையில் வங்கி ஊழியர்கள் நகை போலியென அடையாளம் கண்டதுடன் உடனடியாக பெண்ணை பிடித்து சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேற்படி பெண் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (20) ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .