2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொலிஸாருக்குக் கல்வீச்சு: சந்தேக நபருக்கு விளக்கமறியலில்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். எழுதுமட்டுவாள் வடக்குப் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்னர் பொலிஸார் மீது கல்வீசித் தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் புதன்கிழமை (20) உத்தரவிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், மேற்படி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்த நபரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்போது, மேற்படி சந்தேகநபர் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச்சென்றவரை கொடிகாமம் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (19) மாலை பொலிஸார் கைது செய்தனர்.

அனுமதியின்றி மணல் ஏற்றியமை, பொலிஸாரைக் கடமை செய்யவிடாமை மற்றும் பொலிஸாருக்கு கற்கள் வீசியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ், சந்தேக நபருக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில்  பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

மேற்படி வழக்கு புதன்கிழமை (20) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .