2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் மினி சூறாவாளி

George   / 2014 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், வடமலை ராஜ்குமார், ஏ.எம்.அப்துல் பரீத்

திருகோணமலை, தம்பலாகமம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (21) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 25  வீடுகள் சேதமடைந்துள்ளதாக தம்பலாகம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி தெரிவித்தார்.

தம்பலாகமம் கோயிலடியில் சுமார் 30 நிமிடங்கள் வீசிய சுழல்காற்றினால் வீடுகளின் கூரைகள் 300 மீற்றருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு பிரதேச செயலாளர், தம்பலாகம் பிரதேச சபை தவிசாளர் முகம்மது சுபியான் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் சென்று சேத விபரங்களைப் பார்வையிட்டனர்.

இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் இன்று பிற்பகல் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளதுடன் இதன்காரணமாக, ஐந்து வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்  கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

கிண்ணியா, காக்காமுனை மேல் திடல் மற்றும் கச்சக் கொட்டித்தீவு ஆகிய பகுதிகளிலேயே இத்தகைய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .