2025 ஜூலை 09, புதன்கிழமை

மின்குமிழை உற்பத்தி செய்தலும் அதனை சந்தைப்படுத்தலும் தொடர்பான பயிற்சிப்பட்டறை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் 


எல்.இ.டி (LED) மின்குமிழை உற்பத்தி செய்தலும் அதனை சந்தைப்படுத்தலும் தொடர்பான இரு நாள் பயிற்சிப்பட்டறை வெள்ளிக்கிழமை (22) மற்றும் சனிக்கிழமை (23) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியதவியுடன் இலங்கை மின்சார சபை மற்றும் பிரக்டிக்கல் அக்சன் நிறுவனமும் இணைந்து நடாத்திய இப்பயிற்சிப் பட்டறையினூடாக ஆலையடிவேம்பு, திருக்கோவில், காரைதீவு பிரதேசங்களைச் சேர்ந்த 37 பேர்; நன்மை அடைந்தனர்.

மின்சாரத்துடன் தொடர்புடைய வாழ்வாதாரத்தில் ஈடுபடும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த  750 பேர், மின்சார பாவனையை கட்டுப்படுத்தல் ஊடாக  அவர்களது அபிவிருத்திகளை செயற்திறன் மிக்கதாக உருவாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் ஆரம்ப நாள் பயிற்சி நெறியில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தார்.

இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக மின்னியல் பொறியியலாளர் றோகித ஆனந்த, வாழ்வாதார ஆலோசகர் எஸ்.கமலநாதான், ஆலோசகர்கள் எஸ்.புவனேந்திரராஜா, பி.ராஜா, பி.மாநில, ஆதம்பாபா இக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சியினை வழங்கி வைத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .