2025 ஜூலை 09, புதன்கிழமை

போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா

Super User   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    நா.நவரத்தினராசா

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகத்துடன் இணைந்து லண்டன் வியாபார தொழில்நுட்பக் கல்லூரி நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நல்லூர் சங்கிலியன் பூங்காவில் சனிக்கிழமை (24) இடம்பெற்றது.

கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி, பாடல் மற்றும் சமயப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களே இதன்போது வழங்கப்பட்டன.

யாழ். மாவட்ட படைகளின் கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் உதய பெரேரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ், யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .