2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நல்லூர் திருவிழாவில் பெண்ணின் தங்க சங்கிலி அபகரிப்பு

George   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உள்வீதியில் வைத்து பெண்ணொருவர் அணிந்திருந்த 1 ½ பவுண் தங்க சங்கிலி ஞாயிற்றுக்கிழமை (24) அபகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்
.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை (24) காலையில் இடம்பெற்றது.

இதன்போதே, சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் தங்கள் நகைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படும்படியும், முக்கியமாக அதிக மக்கள் உள்ள இடங்களில் அதிக கவனத்துடன் இருக்கும்படியும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .