2025 ஜூலை 09, புதன்கிழமை

இந்திய அரசுடன் இணைந்து செயற்படவேண்டும்: சிங்ஹா

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'இலங்கை மத்திய அரசாங்கமும் வடமாகாண சபையும் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்' என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார்.

யாழ். அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

'இந்திய அரசாங்கத்துடன் இலங்கை மத்திய அரசாங்கமும் வடமாகாண சபையும் இணைந்து செயற்பட்டு, மக்களின் வளமான சுவீட்சமான எதிர்காலத்திற்காக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை, நாங்களும் இந்திய பிரதிநிதி என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபையும் எம்முடன் இணைந்து செயற்படும் படி மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

நாங்களும், மக்களின் விடிவுக்காகவும், சுபீட்சத்திற்காகவும் இணைந்து பல செயற்றிட்டங்களை மேற்கொள்வோம். இதனூடாக இலங்கை - இந்திய நல்லுறவு மேலும் மேம்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .