2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மதுபானம், கள்ளு வைத்திருந்தவர்களுக்கு தண்டம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் வைத்திருந்தமை மற்றும் அளவுக்கு அதிகமாக கள் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட 13 பேருக்கு, ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து சாவகச்சேரி பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை புதன்கிழமை (27) உத்தரவிட்டார்.

அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் வைத்திருந்த மூவர் கடந்த திங்கட்கிழமை (25) சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

மேற்படி மூவரும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (27) ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களில் ஒருவர் இதற்கு முன்னரும் ஒருமுறை இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தண்டம் விதிக்கப்பட்ட காரணத்தால், அந்நபருக்கு 40 ஆயிரம் ரூபா தண்டமும், மற்றைய இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபா தண்டமும் நீதவான் விதித்தார்.

இதேவேளை, அளவுக்கு அதிகமாக கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினரால் கடந்த இரண்டு வாரங்களில் 10 பேர் பிடிக்கப்பட்டனர்.

அவர்களை, புதன்கிழமை (27) மன்றில் ஆஜர்ப்படுத்திய வேளையில், 10 பேருக்கும் நீதவான் தலா 3 ஆயிரம் ரூபாய்ப்படி 30 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .