2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பொலிஸ் வாகனத்தில் மோதியவருக்கு விளக்கமறியலில்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய வாகனமொன்றை மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்து மோதி சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா புதன்கிழமை (27) உத்தரவிட்டார்.

ஆலயமொன்றில் கடமையில் ஈடுபட்டுவிட்டு செவ்வாய்க்கிழமை (26) இரவு பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த பொலிஸ் வாகனம் (ஜீப்) மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதியுள்ளனர்.

இச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. இருந்தும், மோதியவர்கள் மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.

தொடர்ந்து, வட்டுக்கோட்டைக் கிழக்கைச் சேர்ந்த சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டார். இதன்போது, மேற்படி சந்தேகநபர் அதிகப்படியான மதுபோதையில் இருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து, அவர் புதன்கிழமை (27) மாலை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .